• Jan 19 2025

தெருத்தெருவா அலையும் பாக்கியா வீட்டு ஆம்பளைங்க! ராதிகா பக்கம் பல்டியடித்த ஈஸ்வரி? கல்யாண கோலத்தில் கணேஷ்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், எழிலும் செழியனும் ஒன்றாக சேர்ந்து அமிர்தாவையும் நிலாவையும் தேடித் திரிகிறார்கள்.

இன்னொரு பக்கம் கணேஷ் நிலாவ என்கிட்ட கொடு என அமிர்தாவுடன் வாக்குவாதம் செய்ய, நிலா அப்பான்னு சொல்லு என்று கணேஷ் கேட்க,  அதற்கு எழில் அப்பா கிட்ட போகணும் என்று நிலா சொல்கிறார். அதற்கு கடுப்பான கணேஷ், அப்பான்னு  சொல்லு என்று குழந்தையை மிரட்ட அமிர்தா நிலாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.

மறுபக்கம் பாக்கியா வாசலில் நின்று எழிலுக்காகவும் செழியனுக்காகவும் காத்துக் கொண்டிருக்க, உன்னால இந்த வீட்டு  ஆம்பளைங்க எல்லாரும் தெருத்தெருவாக அலஞ்சிட்டு இருக்காங்க என்று ஈஸ்வரி திட்டுகிறார்.

இதை தொடர்ந்து ஈஸ்வரி உள்ளே போனதும் அங்கு வந்த ராதிகா, உங்களால் 50 பேர் இல்ல 500 பேருக்கு கூட அசால்டா சமைக்க முடியும். அதுல எந்த பிரச்சினை வந்தாலும் நீங்க சமாளிக்கலாம். 

ஆனால் அதை மாதிரி எல்லாத்தையும் சமாளிக்கலாம் என்று நினைக்கிறது தப்பு என சொல்லிக் கொண்டிருக்க, உள்ளே சென்ற ஈஸ்வரி மீண்டும் வந்து நான் மனசுல நினைச்சத நீ அப்படியே சொல்லிட்டா, 50 பேருக்கு சமைச்சிட்டா உன்னால எல்லாம் செய்ய முடியும் என்று கிடையாது, ஆனால் நீ உலக மகா அறிவாளி என்று பாக்கியாவை திட்டுகிறார்.

மேலும் இவளும் தான் இருக்கா. நிறைய படிச்சிருக்கா, ஆனால் எவ்வளவு அமைதியாக இருக்கா என்று ராதிகா பக்கம் சாய்கிறார் ஈஸ்வரி

மறுபக்கம் எழிலும் செழியனும் பழனிச் சாமியை சந்தித்து விஷயத்தை சொல்ல, அவர் எப்படியாவது  விடியிறதுக்கு உள்ள  கண்டிப்பா கண்டுபிடிக்கலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறார்.

அதை அடுத்து பாக்கியாவுக்கு கணேசன் கடத்திச் சென்ற கார் நம்பர் நினைவுக்கு வர, அதை உடனடியாக செழியனுக்கு அனுப்புகிறார். செழியன் பழனி சாமிக்கு அனுப்பி அந்த காரை ட்ரெஸ் செய்ய முயற்சிக்கிறார்கள்.

அதன் பின் கணேஷ் அமிர்தாவிடம் விடிஞ்சா உனக்கும் எனக்கும் கல்யாணம், நாம வேற எங்கேயாவது போய் இருப்போம், நிலா பாப்பா நான்  நீ  மூணு பேரும் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்ல, அமிர்தா இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

மறுநாள் விடிந்ததும் அங்கு கணேஷ் இல்லாததை பார்த்த அமிர்தா, தப்பிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் ஒரு கதவு திறக்க இதனால் சந்தோஷப்பட்ட அமர்தா தப்பிக்க நினைக்க, அங்கு மாப்பிள்ளை கோலத்தில் கணேஷ் தேவையான பொருட்களுடன் வந்து நிற்கிறார். அதை பார்த்து  அதிர்ச்சி அடைகிறார் அமிர்தா. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement