• Jun 28 2026

கருப்புசாமி பக்தர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்.! ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட சீக்ரெட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று  ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மதுரையில் உள்ள சோலைமலை பொறியியல் கல்லூரியில் இந்த விழா நடைபெறும் என வெள்ளிக்கிழமை மாலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கருப்புசாமியை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தின் இசை விழாவுக்கு மதுரை தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானதாக பார்க்கப்படுகிறது.

சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். த்ரிஷா நாயகியாகவும், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பாளராகவும் உள்ளனர். ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் மூன்று பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தப் படம் வரும் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இசை விழா குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில், ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், தனக்கு ரொம்ப நாளாகவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் வைக்க வேண்டும் என்று தான் விருப்பம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் கருப்புசாமி பக்தர்களுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருக்குற பாட்டு ஒன்றை இன்று ரிலீஸ் பண்ண உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சாய் அபயங்கர் இந்த படத்தின் பாடல்களை லைவா கொடுக்கப் போகின்றார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement