• Jun 07 2026

தனது நண்பர்களுக்கு த்ரிஷா கொடுத்த பார்ட்டி.! ஏன் தெரியுமா.? வைரல் போட்டோஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இறுதியாக குட் பேட் அக்லி, விடாமுயற்சி, லியோ, தக் லைப் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக அறிமுகமானவர் திரிஷா. அதன் பின்பு அவருக்கு நாயகியாகவும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி லேசா லேசா, மௌனம் பேசியதே இரண்டு படங்களில் கமிட் ஆனார். அதில் லேசா லேசா படம் தாமதமானது. 

அதே நேரத்தில் மௌனம் பேசியதே படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் திரிஷாவின் கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி இடத்தை கொடுத்தது.


இதைத் தொடர்ந்து திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன. அதன்படி விஜய், அஜித், சிம்பு, தனுஷ், ரவிமோகன், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களோடு நடித்தார். ரஜினியுடன் பேட்டை படத்திலும் நடித்தார்.

மேலும் இவருக்கும் ராணா டகுபதிக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. பின்பு வரும் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என வருண்  வீட்டினர் கூறியதால் அந்த திருமணத்தை நிறுத்தினார் திரிஷா. அதன் பின்பு தனியாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் திரிஷா தனது 43வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்கு முன்பு பிறந்தநாள் முன் பிரீ பர்த்டே பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement