சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ படம், வெளியான முதல் நாளே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது நேர்மையான கருத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘கூலி’ படம் குறித்து பேசும்போது, முதலில் தனது தந்தையின் ரசிகையாகவே தான் அந்த படத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளார். அதாவது, “நான் முதல்ல எங்க அப்பாவோட தீவிரமான ரசிகை” என்று அவர் கூறிய வார்த்தைகள், ரஜினி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.
மேலும் அவர், " கூலி படத்தில அவரோட De- Aging காட்சிகளை ரொம்ப ரசிச்சுப் பார்த்தேன். படம் எனக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டா,கண்டிப்பா ஆமான்னு தான் சொல்லுவேன். ஆனா, அது அப்பாவோட கரியர்லயே ஒன் ஆப் த பெஸ்ட் படமான்னு கேட்டா,கண்டிப்பா இல்லன்னு தான் சொல்லுவேன்." என்று கூறியிருந்தார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!