• Jan 19 2025

ஒரு லட்ச ரூபாய்க்கு பூ, மாலை வாங்கிய விகடன்! ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் சில சுவாரஸ்ய தகவல்! வெற்றியின் ரகசியம் இதுதான்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி  கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலுக்காக தயாரிப்பு நிறுவனமான விகடன் குழு ஏராளமாக செலவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மொத்தமே எட்டு முக்கிய கேரக்டர்கள் மட்டுமே உள்ளன. அண்ணாமலை விஜயா தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கும் நிலையில் மனோஜ் ,முத்து , ரவி ஆகியோர்களின் மனைவியாக மீனா, ரோகிணி மற்றும் சுருதி ஆகியோர் உள்ளன. கிட்டத்தட்ட மொத்தமே இந்த எட்டு கேரக்டர்களை சுற்றி தான் கதை நகர்ந்து வருகிறது என்றும் ஆனாலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பொதுவாக ஒரு சீரியல் என்றால் நாயகன் நாயகி என்று இரண்டு கேரக்டர்களை சுற்றியே மற்ற  கேரக்டர்கள் இருக்கும். ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மேற்கண்ட எட்டு கேரக்டர்களுக்குமே முக்கியத்துவம் தருவதும், சம அளவிலான வாய்ப்பு தருவதும் தான் இந்த சீரியல் மிக குறைந்த நாட்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த சீரியலில் இயல்பான காட்சிகள்  இருப்பதால்தான் மக்கள் மனதில் உடனே இடம்பிடித்து விட்டது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது 500 மாலைகள் கட்டும் காட்சி  கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனமான விகடன் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு பூக்கள் மற்றும் மாலைகள் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பொதுவாக இது போன்ற காட்சிகளில் ஒரு சில ஆயிரங்களுக்கு மட்டும் பூக்களை வாங்கி அதை சில டெக்னிக் ஷாட் மூலம் நிறைய பூக்கள் வாங்கியது போல் காட்டுவார்கள். ஆனால் விகடன் குழுவினர் உண்மையாகவே ஒரு லட்ச ரூபாய்க்கு பூக்கள் வாங்கி மாலை கட்டும் நபர்களையும் வேலைக்கு அமர்த்தி மாலைகளாக கட்டி இயல்பாகவே இந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான் இந்த காட்சிகள் கடந்த சில நாட்களாக சுவாரசியமாக உள்ளது என்பதும் பார்வையாளர்கள் மனதை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி இன்றைய எபிசோடில் சில கேரக்டர்கள் பாட்டு பாடும் காட்சி இருக்கும் நிலையில் அந்தந்த கேரக்டர்கள் உண்மையாகவே பாடி இருப்பதாகவும் அவர்களே டப்பிங் குரல் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக கடந்த பல 40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் ஆர் சுந்தர்ராஜன் அவர்கள் முதன்முதலாக இந்த சீரியல் தான் பாடியுள்ளார் என்பதும் அதுவும் அவர் இந்த பாடலை பாடுவதற்காக மூன்று நாட்கள் பயிற்சி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரும் அவர் நம்பிக்கை இல்லாமல் இயக்குனரிடம் ஒருமுறை பாடி காட்டியதாகவும் நான் பாடியது நன்றாக இருந்தால் சீரியலில் வைத்துக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் எடுத்து விடுங்கள் என்று கூறியதாகவும் தெரிகிறது. 


ஆனால் இயக்குனர் நீங்கள் சூப்பராக பாடியிருக்கிறீர்கள் சார், இதுவே போதும், நீங்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி என்று கூறியதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் இந்த சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்கள் எல்லோருமே சிறந்த ஒத்துழைப்பு தந்ததே இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு காரணமாக உள்ளது.  

தமிழில் இந்த சீரியல் வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் மலையாளத்திலும் மீனா கேரக்டரில் கோமதி பிரியா தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் அளவுக்கு தெலுங்கு மற்றும் கன்னடம் பிரபலமாகவில்லை என்றாலும் மலையாளத்தில் நம்பர் ஒன் சீரியலாக வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement