• Apr 02 2025

என்ன சார் சொல்றிங்க! BTS அடிமைகளா? கொரியா மாப்பிள்ளைக்கு எங்க போறது!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் நம் இசைஞானி  இளையராஜாவின் இசைக்கு அடிமையாகி கிடந்த இளைய சமுதாயம் கடந்த சில ஆண்டுகளாக இரைச்சல் இசைக்கும் இடைவிடாத நடனத்துக்கும் பெயர் போன BTS இன் கொடிய பாடல்களுக்கு அடிமையாகி கிடப்பதாக தகவல் வெளியாகுகின்றது


RM , JIN , SUGA , J-HOPE , JIMIN ,  V , JUNG KOOK என்கிற தென்கொரியாவை சேர்ந்த ஏழு இளம் இசை கலைஞர்களின்  நடனங்களும் ,பாடல்களும் , இசைகளும் 2K  கிட்ஸ் பலரது தூக்கத்தை கெடுத்து வருவதாக கூறப்படுகின்றது காலத்துக்கு ஏற்ப இசை ரசனை மாறக்கூடியது என்றாலும் மொழி கடந்தும் நேசிக்கும் அளவுக்கு BTS குழுவினரின் நடன அசைவுகள் , உடைகள் , சிகை அலங்காரம் போன்றவை இளசுகளை வெகு விரைவாக கவர்ந்து விட்டது என்றே கூறலாம்


இந்த நிலையில் இந்த BTS  குழுவினரின் வீடியோக்களை மணிக்கணக்காக பார்த்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் நான் மணந்தால்  இந்த வீடியோவில் இருப்பதை  போன்ற ஒருவரையே மணப்பேன்  என்று சொல்ல அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கொரிய மாப்பிளைக்கு எங்கே செல்வது என்று மனநல ஆலோசகரை நாடி உள்ளனர்.


படிப்பையும் எதிர்காலத்தையும் மறந்து BTS மோகத்தில் மூழ்கிக்கிடந்த அந்த கல்லூரி மாணவிக்கு உரிய அறிவுரைகளை கூறி   இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஒருவர் இருவர் அல்ல பல கல்லூரி மாணவ ,மாணவிகள் இதற்கு அடிமையாகி தன்னிடம் சிகிட்சைக்கு வருவதாக கூறுகிறார் மருத்துவர் இளைய ராஜா இடைவிடாத செல்போன் பயன்பாட்டால் இன்றைய இளைஞர்கள் இப்படி பாடுபடுகின்றனர் என வேதனை தெரிவித்தார் டோக்ட்டர் இளையராஜா.  

Advertisement

Advertisement