• Nov 22 2024

ஒரு காலணிக்கு இவ்வளவு மவுசா? எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகருமாக திகழ்பவர் தான் எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி. இவர் 20 ஆம் நூற்றாண்டில் பிரபலமான இசைக் கலைஞராக காணப்படுகின்றார்.

இதன் காரணத்தால் அவர் ராக் ரோலிங் மன்னன் என போற்றப்படுகிறார். எனினும் கடந்த 1977 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார்.

1977 ஆண்டு இவர் மறைந்ததில் இருந்து அவரது பல உடைகள், நகைகள் மற்றும் நினைவுப்பொருட்கள் என்பன ஏலத்தில் ஆயிரக்கணக்கான டாலருக்கு விற்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 1950 களில் அவர் பயன்படுத்திய ஊதா நிறக் காலனி தற்போது மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி பிரபல பாப் பாடகரும் நடிகருமான எல்விஸ் ஆரோன் பிரெஸ்லின், காலணி 1.25 கோடிக்கு ஏலம் போய் உள்ளதாவும், அதனை அவரின் ரசிகர் ஒருவர் இதனை வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1950 களில் எல்வின் பிரைஸ் மேடையில் பாடும்போது  ஊதா நிறத்திலான காலணிகளை தான் அவர் அதிகம் பயன்படுத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement