• Dec 08 2023

ஒரே நாளில் இத்தனை குறும்படமா?- மாயா குரூப்பை கதற விட்ட கமல்ஹாசன்- இன்றைய எப்பிஷோட்டில் நடந்தது என்ன தெரியுமா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறது. பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பியபிறகு வந்த விமர்சனங்களால் கடும் கோபமாகி இருக்கும் கமல் இன்றைய தினம் நிகழ்ச்சியை எப்படி சுவாரசியமாக்கினார் என்பதைப் பார்ப்போம்.

அதாவது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸைச் சந்தித்ததுமே பிரதீப் மீது அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு என்ன என்பதைக் குறும்படமாகப் போட்டுக் காட்டினார். அதனைத் தொடர்ந்து ரெட்காட் கொடுப்பதற்காக இவர்கள் சொன்ன காரணங்களுக்கும் உரியகுறும்படமும் போடப்பட்டது


தொடர்ந்து ரெட்காட் கொடுப்பாங்க என்று நினைக்கல,மஞ்சள் காட் கொடுத்து எச்சரித்து விடுவாங்க என்றுமாயா குரூப் பேசிட்டு இருந்த குறும்படமும் போடப்பட்டது. இது தவிர எவ்வளவு தப்பு வேணும் என்றாலும் பண்ணிக்கலாம், அது பற்றி கமல்சேர் கேட்டால் மன்னிப்புக் கேட்டிட்டு போய்டலாம் என்று மாயா குரூப் பேசிய வீடியோவும் போடப்பட்டது.

இதனால் மாயா குரூப் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். அத்தோடு பிக்பாஸ் வரலாற்றிலேயே ஒரே நாளில் 4 குறும்பம் போட்டது இந்த சீசனில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement