• Jan 19 2025

சினேகன் செய்த செயலால் அதிர்ச்சி.. வெளியே விரட்டி கதவை சாத்திய கன்னிகா..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பாடலாசிரியர் சினேகன் செயலால் அவரது மனைவி கன்னிகா அதிர்ச்சி அடைந்து அவரை வெளியே விரட்டி கதவை சாத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல பாடலாசிரியர் சினேகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தை கமல்ஹாசன், பாரதிராஜா உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர் என்பதும் தெரிந்தது.

திருமணத்துக்கு பின்னால் நடிகை கன்னிகா தனது கணவருடன் உள்ள ரொமான்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாடலாசிரியர் சினேகன் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாடியை எடுத்து கிளீன் ஷேவ் செய்திருக்கும் நிலையில் அவரைப் பார்த்த கன்னிகா அதிர்ச்சி அடைந்து செல்ல கோபத்துடன் அவரை வெளியே தள்ளி கதவை சாத்துகிறார்.

அதன் பிறகு மீண்டும் சினேகன் கதவை தட்டிய பிறகு உள்ளே வரும் சினேகனை கோபத்துடன் அவர் பார்க்கிறார். இதனை அடுத்து நடக்கும் சில ஊடல் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவை பதிவு செய்த கன்னிகா ’10 ஆண்டுகளுக்கு பிறகு நான் அவரை கிளீன் ஷேவில் பார்க்கிறேன், கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உள்ளது, அவர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தாடியை எடுத்துள்ளார், அதுவும் ஒரு முக்கியமான விஷயத்திற்காக, அது என்ன என்பது விரைவில் வெளியாகும்’ என்று கன்னிகா கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு 10 வயது குறைந்தது போல் சினேகன் உள்ளார் என்றும், உங்களுக்கு தாடி இருந்தால் தான் அழகு என்று நினைத்தேன், ஆனால் அதைவிட இது ரொம்ப அழகாக இருக்கிறது என்றும் ,சினேகன் அண்ணனுக்கு தாடி தான் ரொம்ப அழகு, இருந்தாலும் பரவாயில்லை, அண்ணன் அழகாகத்தான் இருக்கிறார் என்றும், கணவன் மனைவி என்ற வார்த்தைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர்கள் வாழ்க்கை உள்ளது என்றும், பலவிதமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.


Advertisement

Advertisement