• Sep 07 2024

தனித்தனியாக ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்.. அப்ப விவாகரத்து கன்பர்மா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்றும் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாகவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனித்தனியாக வந்திருப்பதை பார்க்கும் போது இருவருக்கும் உண்டான பிரிவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், உலக அழகி ஐஸ்வர்யா ராயை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவருக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அமிதாப்பச்சனுடன் அபிஷேக்பச்சன் வந்ததாகவும், ஐஸ்வர்யா ராய் தனியாக தனது மகளுடன் வந்ததாகவும் இருவரும் தனித்தனியாக மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக பரவி வரும் வதந்தி உண்மைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் இருவரும் இணைந்து தான் திருமணத்திற்கு வந்தார்கள் என்றும் கூறி ஒரு சில வீடியோக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement