தனது வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்திருந்தாலும் உண்மையான சந்தோஷம் இல்லை என VJ அர்ச்சனா வேதனையுடன் தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொகுப்பாளர் பணியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ அர்ச்சனா. தனது தனித்துவமான பேச்சாற்றல், நகைச்சுவை மற்றும் இயல்பான அணுகுமுறையால் பலரது மனங்களையும் கவர்ந்துள்ள இவர், அவ்வப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றதா என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் பலரையும் சிந்திக்க வைத்துள்ளன.
குறித்த பேட்டியில் பேசிய அர்ச்சனா, “என்னை நானே பேட்டி எடுத்தால், முதலில் என்னிடம் ‘நீ சந்தோஷமாக இருக்கிறாயா?’ என்ற கேள்வியைத் தான் கேட்பேன். வாழ்க்கையில் மனநிறைவு இருக்கின்றது. ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்திருக்கின்றன. ஆனால், உண்மையான சந்தோஷம் இல்லை.
அந்த அர்ச்சனா இப்போது இல்லை. நம்முடைய எல்லா கடமைகளையும் சரியாக முடித்துவிட்டு மேலே போகும்போது தான் அந்த சந்தோஷம் கிடைக்கும்..” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்து, ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்த பின்னரும் மனதளவில் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியவில்லை என்ற அவரது வார்த்தைகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
வெளிப்புற வெற்றிகளுக்கும் மனதளவிலான மகிழ்ச்சிக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை வெளிப்படுத்தும் அவரதுஇந்தக் கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!