• Oct 13 2026

அனிருத்தின் வாழ்க்கை இப்படியா.? மகனின் பழக்கத்தைப் பார்த்து தந்தை சொன்ன கருத்து.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் அனிருத்தின் வித்தியாசமான வாழ்க்கை முறை குறித்து அவரது தந்தை ரவி ராகவன் தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றது.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றார். அவர் இசையமைக்கும் பாடல்கள் பலவும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், அனிருத்தின் அன்றாட வாழ்க்கை முறை குறித்து அவரது தந்தை பகிர்ந்துள்ள தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரவி ராகவன், உலகமே தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அனிருத் விழித்திருந்து தனது வேலைகளைச் செய்வார் என்றும், மற்றவர்கள் வேலை செய்யும் நேரத்தில் அவர் தூங்கிக்கொண்டிருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீண்ட காலமாக இவ்வாறான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பது தனக்குத் தெரிந்திருந்தாலும், அனிருத்தின் இந்த வித்தியாசமான பாணி தான் சிறந்த இசையை உருவாக்க அவருக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தந்தையாக மகனின் இந்தப் பழக்கத்தைப் பார்த்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அவரது இசைப் பணிகளையும் அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும் கருத்தில் கொள்ளும் போது தன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் ரவி ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

அனிருத்தின் இசைப் பயணத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த வித்தியாசமான வாழ்க்கை முறை குறித்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.

Advertisement

Advertisement