தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட சம்பவம் இதுவே முதல் முறை. பார்வதி மற்றும் கமருதீனுக்கு தொகுப்பாளரான விஜய் சேதுபதி ரெட் கார்டு வழங்கியது உலகளவில் கவனம் பெற்றது.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள கிராண்டு ஃபினாலேவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கூட, பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து பார்வையாளர்கள் தெளிவான முடிவுக்கு வர முடியாமல் இருப்பது முக்கிய அம்சமாக காணப்படுகிறது.
எனினும் டைட்டில் வின்னர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் திவ்யா கணேஷ் தான் டைட்டிலை வெல்ல வாய்ப்பு அதிகம் என கூறி வர, மற்றொரு தரப்பினர் திவ்யாவுக்கு பதிலாக, சபரிநாதனுக்கு டைட்டிலை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதுவரை விக்கல்ஸ் விக்ரம் டைட்டில் வின்னர் ஆகலாம் என பெரிதாக யாரும் பேசவில்லை. அதேபோல், அரோரா டாப் 3-க்குள் கூட வரக்கூடாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ஒன்றில் ஹவுஸ்மேட்ஸ்க்கு அவர்களின் உணர்வுபூர்வமான ஏவி ஒன்று காட்டப்பட்டது. அதில் ரம்யா ஜோவும் திவாகரும் சண்டை இட்ட காட்சி ஒளிபரப்பப்பட்டது.
இதன்போது சக ஹவுஸ்மேட்ஸ் அருகில் இருக்கும் போது கானா வினோத்தை பார்த்து திவாகர் ஏதோ சொல்ல, கானா வினோத் துப்புகிறார். இதனால் பதிலுக்கு திவாகரும் துப்புகின்றார். இவர்களை பிரஜின் சமாதானப்படுத்துகின்றார்.
வழக்கமாக கடைசி வாரத்தில் ஹவுஸ்மேட்ஸ் இடையே பாசம் அதிகரிக்கும் நிலையில், இந்த சீசனில் ஃபினாலே வாரத்திலும் சண்டைகளுக்கு குறைவே இல்லாமல் இருப்பது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Listen News!