மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இயல், இசை, நாடகம் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2021 ஆம், 2022 ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளன.
அதில் நடிகர்களான எஸ். ஜே சூர்யா, மணிகண்டன், விக்ரம் பிரபு மற்றும் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் லிங்குசாமி, பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயர் ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகளை முதல்வர் மு. க ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரதியார் விருது முனைவர் நா. முருகேச பாண்டியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்பட நடன கலைஞர் சாண்டி எனப்படும் சந்தோஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பிரபல பின்னணி இசைப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ்க்கு வழங்கப்படும் என்றும், பால சரஸ்வதி விருது முத்துக்கண்ணம்மாளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியானுக்குக் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!