• Sep 28 2025

சினிமா புகழைத் தாண்டிய மனிதநேயம்..கவுண்டமணி-செந்தில் வாரிசுகள் இப்படியானவர்களா?

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மகிழ்ச்சி நாயகன்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். அவர்கள் படங்களில் நிகழ்த்திய நகைச்சுவையை இன்றும் பலர் மறக்காது உள்ளனர். ஆனால் தற்போது, இவர்களின் வாரிசுகள் உண்மையான வாழ்க்கையில் மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் புதிய பாதையில் பயணித்து வருகிறார்கள்.


இன்று வெளியாகியுள்ள தகவல்களின் படி, கவுண்டமணியின் மகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார். அதேபோன்று, செந்திலின் மகன் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறார். இவர்கள் இருவரும், தங்களின் பிரபலமான பெற்றோர்களின் நிழலைத் தாண்டி, தனக்கென ஒரு அடையாளத்தை மனிதநேயத்தின் வழியாக உருவாக்கி வருவது பெருமைக்குரியதாகும்.

இவர்கள் போன்றவர்களே இந்த தலைமுறைக்கு "முன்னுதாரணம்" என அழைக்கப்பட வேண்டியவர்கள். உண்மையான வாழ்க்கையின் ஹீரோக்கள், வெறும் திரையில் அல்ல, உண்மை நிகழ்வுகளில், மனிதநேயத்தின் ஒளியாக இருந்தால் அது நம்ம அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என தற்பொழுது பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். 


கவுண்டமணி மற்றும் செந்தில் என்ற பெயர்களால் நம்மை சிரிக்க வைத்தவர்கள், இன்று தங்களது வாரிசுகள் மூலம் நம்மை உணர்ச்சியால் நெகிழச் செய்கிறார்கள். மருத்துவ சேவைகள் என்பது இன்று லட்சக்கணக்கில் செலவாகும் ஒரு துறையாக மாறியுள்ள நிலையில், இந்த இருவரும் அதை இலவசமாக வழங்கி வருவது ஒரு மிகப் பெரிய சமூக சாதனையாகும். 

Advertisement

Advertisement