கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.இதனையடுத்து கேப்டனின் உடல் தேமுதிக தலைமை அலுவலத்தில் வைத்திருந்த போது பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்த வகையில் நடிகர் விஜய்யும் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலில் அடையாளம் தெரியாத நபர் விஜய் மீது காலணியை வீசினார்.இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதனால் ரசிகர்கள் இடையில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என சிலர் கூறி வந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காலணி வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விசாலிடம் இது குறிதது கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஷால், திரையுலகம் முன்னேற காரணமாக இருந்தவருக்கும், தன்னுடைய கலை பயணத்தில் முக்கிய தூணாக இருந்தவருக்கும் அஞ்சலி செலுத்த தான் விஜய் வந்தார். அதனால் விஜய் மீது காலணி வீசியதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதும் யாருக்கும் தெரியாது என கூறியுள்ளார்.
Listen News!