• Aug 15 2025

சிவகார்த்திகேயனின் சுதந்திர தின க்ளிக்ஸ்...! இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்....!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன், தனது கியூட் முகபாவனைகளாலும், இயல்பான நடிப்பாலும் மக்கள் மனதில் தனித்த இடம் பிடித்துள்ளார். தற்போது, அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு சிறப்பு புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த அழகான புகைப்படம், தேசியக் கொடியுடன் இணைந்து, தேசபக்தி உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. நேர்த்தியான தோற்றம் எளிமையிலேயே அழகு என்ற கூறை நிரூபிப்பதுபோல் இருக்கிறது. மேலும் தனது இரு மகன்களுடன் எடுத்த இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


மேலும் சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்கள், பகிர்வுகள், மற்றும் கருத்துகள் திரண்டுள்ளன. ரசிகர்கள் “தலைவரின் தேசபக்தி ஸ்டைலிஷ்!”, “எப்போதும் இன்ஸ்பிரேஷன்” என்று உருக்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தற்போது ‘மதராஸி ’, ‘பராசக்தி ’ போன்ற திரைப்படங்களில் பிஸியாக உள்ள சிவகார்த்திகேயன், தனது சமூகப் பொறுப்பையும் மறக்காமல் இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடிய விதம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.





Advertisement

Advertisement