• Mar 20 2025

கமலஹாசன் இனிமேல் விண்வெளி நாயகனா? உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகி அதிரடி வெற்றியை பெற்ற 'அமரன்' திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால் படக்குழுவும் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளதுடன் அதன் வெற்றி விழாவையும் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில், 'அமரன்' திரைப்படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி பூர்வமான கதையமைப்புடன் தயாராகி மக்கள் மனங்களை ஈர்த்தது. இப்படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தினையும் கொடுத்திருந்தது.


மேலும் அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், "இந்த வெற்றியின் முழு பாராட்டும் ரசிகர்களுக்கே என்றதுடன் அவர்கள் இல்லாமல் எங்களால் இது சாத்தியமாக முடியாது" என உருக்கமாக பேசினார். அத்துடன் இந்த நிகழ்வின் போது கமல் ஹாசன் தன்னை " உலக நாயகன் " என்று அழைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டார். இதனால் அவரை இனிமேல்  "விண்வெளி நாயகன்" என்று அழைக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

முதல் நாள், 'அமரன்' படத்திற்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பு அபாரமாக இருந்தது. அதுவே இப்படத்தின் 100 நாள் கடப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்தது என மகிழ்ச்சியுடன் கூறினார் சிவகார்த்திகேயன்.

Advertisement

Advertisement