• Mar 20 2025

கிரிக்கெட் வீராங்கனைக்கு உதவி செய்த நடிகர்...- அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய வீராங்கனையும் கனா படத்தில் நடித்தவருமான சஜனா சஜீவன் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி நேர்காணல் ஒன்றில் கதைத்துள்ளார். அவர் அதில் கூறுகையில் சிவகார்த்திகேயன் மிகவும் மனிதநேயம்  உள்ளவர் என்றதுடன் அவர் தனக்கு எதிர்பாராத விதமாக பல உதவிகள்  செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வீராங்கனை மேலும் கூறுகையில், " 2018ம் ஆண்டு வயநாட்டு வெள்ளத்தில் தன்னுடைய வீடு பாதிக்கப்பட்ட போது நடிகர் சிவகார்த்திகேயன் உடனே என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? எனக் கேட்டார் " என்றார்.


இதற்கு சஜனா தன்னுடைய கிரிக்கெட் கிட் மொத்தமாக வெள்ளத்தில் போய்விட்டது. இப்போதைக்கு எனக்கு spikes shoe மட்டும் தான் தேவைப்படுகின்றது என்றேன். உடனே சிவகார்த்திகேயன் சார் எனக்கு அதை ஓரு வாரத்துக்குள்ளேயே வாங்கி அனுப்பிவிட்டதாக கூறினார் சஜனா. அத்துடன் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி எனக்கு மிகவும் பெரிதாக இருந்தது என்றதுடன் எனக்கு இப்பொழுது தான் சிவகார்த்திகேயன் பற்றி கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.


இந்த தகவல் தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் அனைவரும்  சிவகார்த்திகேயனின் நல்ல மனப்பான்மையை பாராட்டுகின்றனர். சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தும் நடிகர் சிவகார்த்திகேயன், திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குவது மட்டுமல்லாது, மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்தும் பணி செய்யும் மனிதராகவும்  உருவாகியுள்ளார்.

Advertisement

Advertisement