• Feb 16 2025

விஜயை வாழ்த்தும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை - சதீஷ் தெரிவிப்பு!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவர். சதீஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களை நடித்திருந்தார்.

அந்தவகையில் த. வெ. க தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்தது குறித்து சதீஷ் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் அவர் விஜய்க்கு அரசியலில்  உள்ள ஆதரவை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். 


மேலும் சதீஷ் கூறுகையில் "விஜய்க்கு வாழ்த்துகள் " ஆனால், அவரை வாழ்த்தும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்றார். அத்துடன்  சினிமாவில் வெற்றி பெற்றது போலவே விஜய் அரசியலிலும் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

இந்த கருத்து திரைத்துறையிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது அரசியல் அறிக்கையை வெளியிட்ட பின்னர், பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். தற்போது, நடிகர் சதீஷின் இந்தக் கருத்தும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement