• Feb 20 2026

மனைவியுடன் மகிழ்ச்சியாக பிறந்தநாளைக் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. லீக்கான வீடியோ.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக துவங்கி, இன்று பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக உயர்ந்துள்ள அவரது பயணம் பலருக்கும் உந்துசக்தியாக உள்ளது.

குடும்பம் முழுவதும் ரசிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பது, நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த நடிப்புடன், ரசிகர்களுடன் இணைந்திருக்கும் தன்மை ஆகியவை அவரை தனித்துவமான நடிகராக உருவாக்கியுள்ளது.


இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சேயோன்’ திரைப்படத்தில் அவர் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகியவுடன் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதற்கிடையில், நேற்று தனது பிறந்தநாளை சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடனும் நெருங்கிய நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார். திரைப்பட துறையில் பிஸியாக இருந்தாலும், குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கும் அவரது இயல்பு ரசிகர்களை எப்போதும் கவர்ந்து வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அவர் கேக் வெட்டி தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

Advertisement

Advertisement