மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான தோல்வி படங்களால் சவால்களை சந்தித்து வந்தார். ரசிகர்கள் மத்தியில் ஒரு காலத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சமீப காலங்களில் அவருடைய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இப்படியான சூழ்நிலையில், அவர் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருப்பது தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

அந்த வெற்றிப் படமே இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவான ‘சர்வம் மாயா’. இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 25, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியானது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம், குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்தது.
‘சர்வம் மாயா’ படம் வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நிவின் பாலியுடன் சேர்ந்து ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக ரியா ஷிபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை பாராட்டும் வகையில் தமிழ் திரையுலகின் பிரபல தம்பதியரான சூர்யா மற்றும் யோதிகா, ரியா ஷிபுவிற்கு மலர் கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!