ஜெயம் ரவி நடித்த ’சைரன்’ திரைப்படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலரை பார்த்த பலர் இந்த படம் ‘கைதி’ படம் போல் இருப்பதாக கூறி வருவதை அடுத்து இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது.
உண்மையில் இந்த படம் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தின் படப்பிடிப்பின் போது தான் தொடங்கப்பட்டது. இரண்டு படங்களிலுமே சிறையில் இருக்கும் கைதி வெளியே வந்து ஒரு முக்கிய பிரச்சனைக்கு முடிவுக்கு காண்பது தான் கதை.
இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் ’சைரன்’ திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கும்போதே ’கைதி’ படத்தின் கதையை கேள்விப்பட்டு லோகேஷ் கனகராஜிடம் டிஸ்கஸ் செய்ததாகவும், ஆனால் உங்கள் கதை வேறு, எங்கள் கதை வேறு அதனால் நீங்கள் பயப்படாமல் உங்கள் கதையை டெவலப் செய்யுங்கள் என்று லோகேஷ் கூறியதாகவும் தெரிகிறது.
ஆனால் ’கைதி’ படத்தை பார்த்த பிறகு தான் யோசித்து வைத்திருந்த சில காட்சிகள் எல்லாம் அதில் இருப்பதை பார்த்து அந்தோணி பாக்யராஜ் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. ஏற்கனவே தான் முழு திரைக்கதையையும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதில் உள்ள காட்சி எப்படி ’கைதி’ படத்தில் வந்தது என்று யோசனையில் இருந்த அவர் தற்போது ’கைதி’ படம் போலவே ’சைரன்’ படம் இருக்கிறது என்று ரசிகர்கள் சொல்வதைப் பார்த்து ’கைதி’ படத்தை பார்த்து தான் காப்பி அடிக்கவில்லை என்றும் எங்கள் ’சைரன்’ காலதாமதமாக வந்துள்ளது என்றும் உண்மையில் சொல்ல போனால் ’சைரன்’ திரைக்கதையை பார்த்து தான் ’கைதி’ காப்பி அடிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.
மொத்தத்தில் ’சைரன்’ படம், ’கைதி’ படத்தின் பாதிப்பு என்ற தகவல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் படத்தை பார்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
Listen News!