• Mar 15 2026

TRP ரேட்டிங்கில் மளமளவென சரிந்த சிறகடிக்க ஆசை சீரியல்.. !!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல் உலகில் இந்த ஆண்டின் 9வது வார டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தில் மூன்று முடிச்சு 9.45 டிஆர்பி புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னணி நிலையை பிடித்துள்ளது. 

இரண்டாம் இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் 7.94 டிஆர்பி புள்ளிகளுடன் விறுவிறுவென முன்னேறி உள்ளது. மூன்றாம் இடத்தில் விஜய் டிவியின் பிரபலமான அய்யனார் துணை 7.79 டிஆர்பி புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளது. 

நான்காம் இடத்தை கயல் சீரியலும்,  ஐந்தாம் இடத்தை மருமகள் சீரியல் 7.58 டிஆர்பி புள்ளிகளுடன் பிடித்துள்ளன.

சன் டிவியின் அன்னம் சீரியல், கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் 6-வது இடத்திலேயே நீடிக்கிறது. அதற்கு 7.06 டிஆர்பி கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் மருமகள் சீரியல் உள்ளது. 


கடந்த வாரம் வரை கயல் சீரியல் உடன் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், இந்த வாரம் சோலோவாக ஒளிபரப்பாகி 7.58 புள்ளிகள் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 7.66 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

அதேநேரத்தில், விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 , இந்த வாரம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளதால் 8-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த சீரியலுக்கு 6.70 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. 

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் மளமளவென சரிந்து 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. 

மேலும், ஜீ தமிழின் கார்த்திகை தீபம் கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்தது, இம்முறை சின்ன மருமகள் அதே இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement