• Apr 02 2025

விஜய் டிவியின் புதிய ரியாலிட்டி ஷோ.. முதல் எபிசோடில் முத்து, மீனா, விஜயா..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது இந்த சீரியலில் உள்ள முத்து - மீனா,  மனோஜ் - ரோகிணி, ரவி - ஸ்ருதி மற்றும் அண்ணாமலை - விஜயா ஆகிய எட்டு கேரக்டர்களும் பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் காலை 6:00 மணிக்கு இந்த சீரியலை பார்ப்பதற்காக அனைவரும் ஹாட்ஸ்டார் ஐ ஓபன் செய்து தயாராக வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்த பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்க உள்ள ரியாலிட்டி ஷோ ஒன்றில் முத்து மீனா மற்றும் விஜயா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக ப்ரோமோ வீடியோ ஒன்று ,வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ’அது இது எது’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி சிவகார்த்திகேயன் மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர்களால் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பமாக உள்ள நிலையில் முதல் எபிசோட் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த ரியாலிட்டி ஷோவின் முதல் எபிசோடிலேயே முத்து, மீனா, விஜயா ஆகியோர் கலந்து கொண்டிருப்பதாக சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது. ஏற்கனவே ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர்கள் விஜய் டிவியில் உள்ள சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் தற்போது அடுத்ததாக ’அது இது எது’ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement