• Nov 14 2024

ரோகிணி காட்டில் இன்னும் மழைதான்.. கடைசி வரைக்கும் மாட்ட மாட்டீங்களா? கமெண்ட்டை லாக் செய்தது ஏன்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில்  ரோகிணி   கேரக்டரில் நடிக்கும் சல்மா அருண் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழை குறித்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்தில் யாரும் கமெண்ட் செய்ய முடியாத வகையில் அவர் லாக் செய்திருப்பது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை ’சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது கடந்த சில நாட்களாக ரோகிணி காட்டில் மழை தான் என்றும் அவருக்கு அடுத்தடுத்து நல்லது நடந்து கொண்டே இருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

27 லட்சத்தை தூக்கி கொண்டு சென்ற ஜீவா தற்செயலாக மனோஜ் - ரோகிணியிடம் மாட்ட அவரிடம் இருந்து 30 லட்சத்தை கறந்த  ரோகிணி , தன்னுடைய அப்பா தான் 15 லட்ச ரூபாய் கொடுத்தார் என்று வீட்டில் கூறிவிட்டு மொத்த பணத்தையும் அமுக்கி விடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்.

அவருக்கு தான் அடுத்தடுத்து நல்லது நடந்து கொண்டிருக்கும் நிலையில் உண்மையாக இருக்கும் முத்து மீனா ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து சோதனைகள் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது ரோகிணி காட்டில் தான் மழை, அவரது பிராடுத்தனம் கடைசி வரைக்கும் தெரியாதா? என்று இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்கள் வெறுப்பில் உள்ளனர்.

இந்த நிலையில்  ரோகிணி   கேரக்டரில் நடிக்கும் சல்மா அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழை பெய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில்  ரோகிணி   காட்டிலும் மழை, இங்கு  ரோகிணி   வீட்டிலும் மழை என்ற கமெண்ட் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் சல்மா அருண் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்யும் ஆப்ஷனை லாக் செய்து உள்ளார் என்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement