• Jul 27 2024

தனுஷூக்கு கியாரண்டி கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.. நாளை ஒரு செம்ம விருந்து இருக்குது..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!


தனுஷ் நடித்த ’ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் தொடங்கிவிட்டன என்பதும் முதல் கட்டமாக நாளை இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷின் 50வது படமான ’ராயன்’ படத்தில் அவரே முக்கிய வேடத்தில் நடித்து இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா உட்பட பலர்  நடித்துள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் நிலையில் நாளை வெளியாகும் பாடல் ’அடங்காத அசுரன்’ என்ற பாடல் என குறிப்பிட்டுள்ள எஸ் ஜே சூர்யா இந்த பாடல் சூப்பராக இருக்கும் என்பதற்கு நான் கேரண்டி என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்றும் பிரபுதேவா இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்றும் எஸ் ஜே சூர்யா குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து நாளை வெளியாகும் இந்த பாடல் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு செம்ம விருந்தாக இருக்கும் என தெரிகிறது.

  தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ள இந்த படம் ஜூன் இறுதியில் வெளியாகவுள்ளது.


Advertisement

Advertisement