• Jan 19 2025

முத்து பணத்தை ரோஷத்துடன் கொடுக்கும் ரோகிணி.. விஜயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஸ்ருதி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகிணி தாங்கள் தர வேண்டிய நகை பணமான 4 லட்சத்தில் 2 லட்சம் ரூபாயை முத்துவிடம் தருகின்றனர். அப்போது சில வாக்குவாதங்கள் மற்றும் சலசலப்பு ஏற்படுகிறது. இறுதியில் மீதி இரண்டு லட்ச ரூபாய் விரைவில் தருவதாக ரோகிணி சொல்வதுடன் பிரச்சனை தற்போதைக்கு முடிவுக்கு வருகிறது.

இதனை அடுத்து இந்த ரெண்டு லட்ச ரூபாயை வைத்து உனக்கு நகை வாங்கலாம் என்று முத்து சொல்ல, அதெல்லாம் வேண்டாம், இன்னொரு கார் வாங்கி வாடகைக்கு விடுவோம், அதில் சம்பாதித்து நாம் சீக்கிரம் மாடியில் வீடு கட்ட வேண்டும் என்று மீனா ஐடியா கூறுகிறார். அதை முத்து ஏற்றுக்கொள்கிறார்.

இந்த நிலையில் அண்ணாமலை -விஜயாவை சேர்த்து வைக்க முத்து, மீனா ஆகிய இருவரும் முயற்சி செய்யும் நிலையில் அண்ணாமலை பிடிவாதமாக மறுக்கிறார். ஒரே அறையில் தூங்குவதற்கு கூட மறுத்த நிலையில் விஜயா வேறு வழியின்றி அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அண்ணாமலை உள்ளே செல்கிறார்.



இந்த நிலையில் மீனா, ரோகிணி, ஸ்ருதி ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அத்தை மாமா இருவரையும் சேர்த்து வைப்போம்,வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மீனா இருவரையும் அழைத்துச் செல்கிறார். ஆனால் வழக்கம் போல் மீனாவுக்கு தான் அங்கு திட்டு கிடைக்கிறது.  ஆனால் அதே நேரத்தில் விஜயாவை ஸ்ருதி லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.

உங்கள் மீதுதான் தவறு, மனோஜ் செய்த தவறை நீங்கள் கண்டிக்காமல் அவரை ஊக்குவித்தீர்கள், நீங்கள் மீனாவிடம் ஒரு சாரி கேட்பதில் கேட்டால் பிரச்சனை முடிந்துவிடும், நீங்கள் பிடிவாதமாக இருப்பதால் தான் பிரச்சனை அதிகரிக்கிறது’ என்று சொல்ல விஜயா ஸ்ருதி மேல ஆத்திரமடைகிறார். அதை அப்படியே மீனா மீது திருப்பி நீதான் அவளை சொல்லிக் கொடுத்து வந்தியா என்றம் என்று மீனாவை மறுபடியும் திட்டுகிறார். அதற்கு ஸ்ருதி அவங்க ஒன்னும் சொல்லல, நானாகத்தான் சொல்கிறேன், நீங்கள் பிடிவாதமாக இருக்காமல் மீனாவிடம் மன்னிப்பு கேளுங்கள், ரோகிணியின் கணவரும் மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்லிட்டு செல்ல, ஸ்ருதி மீது விஜயா ஆத்திரப்படுகிறார்.

இந்த நிலையில் முத்து மற்றும் செல்வம் ஆகிய இருவரும் புதிய கார் வாங்கும்  முயற்சியில் ஈடுபடுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement