தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத நாயகிகளில் ஒருவராக பெயர் பெற்ற நடிகை சிம்ரன், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல விடயங்களைப் பகிர்ந்திருந்தார். அந்த நிகழ்வின் முக்கியம்சமாக, நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து சிம்ரன் தெரிவித்த கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகின்றன.
சிம்ரனிடம், விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சிம்ரன் மிகவும் நிதானமாகவும், நேர்மையாகவும் பதிலளித்திருந்தார். மேலும் "விஜய் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கின்றார். அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க சில நாட்கள் பொறுமையாக காத்திருக்கலாம். ஆனால் அவர் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு தற்பொழுது என்னால் Good Luck! தான் சொல்ல முடியும்." என்றார்.
அத்துடன் தல அஜித் பத்ம பூஷன் விருதினைப் பெற்றுக் கொண்டதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் சிம்ரன். தற்பொழுது இக்கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலடைந்து பலரும் சிம்ரனின் கருத்துக்களைப் பாராட்டி வருகின்றனர்.
Listen News!