• Jan 20 2025

பாலிவுட் நடிகர் உயிரிழந்த அதே அப்பார்ட்மெண்ட்.. சிம்பு பட ஹீரோயின் பூஜையுடன் வெளியிட்ட வீடியோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தவர் தான் சுஷாந்த் சிங். அவர் நடித்த தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் மிகவும் பாப்புலர் ஆனது.

இவர் தனது கல்லூரி காலங்களில் நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி  பல பரிசுகளை வென்றுள்ளார். அதற்கு பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர், தொலைக்காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். அதற்குப் பிறகு 2008 ஆம் ஆண்டு ஹிந்தி  திரைப்பட சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

இவ்வாறு ஹிந்தி சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுஷாந்த் சிங், 2013 ஆம் ஆண்டு 'கை போ ச்சே' என்னும் திரைப்படத்தில் நடித்து நடிகராக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்தெடுக்கப்பட்ட படத்தில் கதாநாயகனாக நடித்தார்.


இதை அடுத்து யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மரணம் தற்போது வரையில் பல பிரபலங்களுக்கு அதிர்ச்சியாகவே காணப்படுகின்றது. இவர் இறந்த பிறகு அவருடைய அப்பார்ட்மெண்டை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை.

இந்த நிலையில், குறித்த அப்பார்ட்மெண்ட்டை நடிகை அடா ஷர்மா வாங்கி உள்ளார். இவர் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் நடித்தவர்.

தற்போது அவர் குடியேறி இருக்கும் நிலையில் பூஜை செய்து பஜனை பாடி இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement