• Jan 19 2025

சிம்பு பட நடிகரின் மகன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் பிரபலங்கள்!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர்தான் நடிகர் சித்திக்.

நடிகர் சித்திக்கின் மூத்த மகனான ரஷீன் மாற்றுத்திறனாளியாக காணப்படுகிறார். கடந்த சில வருடங்களாகவே இவர் மூச்சு திணறல் உட்பட பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ரஷீன் வீட்டில் இருக்கும்போது திடீரென சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.


இவருடைய இறுதிச் சடங்குகள் இன்றைய தினம் 4 மணி அளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.

நடிகர் சித்திக்கின் இளைய மகன் ஷாகிலும் ஒரு நடிகர். அத்துடன் சித்திக் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழில் வெளியான வைகை எக்ஸ்பிரஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வெந்து தணிந்தது காடு, ஜனா, ரங்கூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement