• Jan 20 2025

வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்கு குவியும் நிதியுதவி.. பிரபல நடிகையும் பணஉதவி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காணப்படும் வெங்கல் ராவ் தற்போது, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் தனக்கு உதவி செய்யுமாறு திரைப்பட நட்சத்திரங்களிடம் உதவி கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்த நடிகர்கள் அவருக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளார்கள். அதன்படி நடிகர் சிம்பு சிறுநீரகப் பிரச்சினைகள் பாதிக்கப்பட்ட வெங்கல் ராவுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்திருந்தார்.

இதை தொடர்ந்து KPY  பாலா ஒரு லட்ச ரூபாய், தாடி பாலாஜி தன்னால் இயன்ற உதவியை செய்திருந்தார்.


இந்த நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் குடும்பத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

இவ்வாறு வெங்கல் ராவின் சிகிச்சைக்கு பிரபலங்கள் தம்மால்  உதவியை செய்து வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement