• Jan 18 2025

இன்று பூஜையுடன் ஆரம்பமான "சித்தார்த் 40" ,பெரும் நட்சத்திர பட்டாளம் தான் போங்க !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

வெற்றி தோல்வி என மாறுதல்களுடன் பயணிக்கும் சித்தார்த்தின் திரைப்பயணமானது இன்று ஒரு பெரும் மைல் கல்லாய்  "சித்தார்த் 40" எனும் இலக்கை வந்தடைந்திருக்கிறது."கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் சிறு பாத்திரத்தில் தோன்றிய சித்தார்த் ,"பாய்ஸ்" படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

Siddharth Turns 40, Check Out 5 Movies ...

தொடர்ந்து திரைப்பயணத்தில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்ததோடு மல்டி ஸ்டார் படங்களிலும் நடித்திருந்தார் நடிகர் சித்தார்த்.அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான "சித்தா" திரைப்படம் பலராலும் ரசிக்கப்பட்டதுடன் வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டது.

Chithha' movie review: Siddharth stars ...

அண்மையில் வெளியாகியிருக்கும் சங்கரின் இந்தியன் -2 திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த் கலவையான விமர்சங்களை  பெற்றுவருகிறார்.இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Image

தற்காலிகமாக "சித்தார்த் 40" என பெயரிடப்பட்டிருக்கும் இப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க '8 தோட்டாக்கள்' புகழ் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார்.சரத் குமார்,தேவயானி,சைத்ரா ஆச்சார் என முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப் படமானது இன்று பூஜையுடன் இனிதே ஆரம்பமாகியுள்ளது.வாழ்த்துக்களை தெரிவித்த அனைவர்க்கும் நன்றி கூறிய தயாரிப்பு நிறுவனம் பூஜை புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது.



Advertisement

Advertisement