• Jan 19 2025

69 வது ஃபிலிம்பேர் விருதுகளை அள்ளிக் குவித்த சித்தா.. முழு லிஸ்ட் இதோ..

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய மொழிகளுக்கான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் திறமை மிக்க சினிமா கலைஞர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 69 ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா கோலாக்கலமாக நடந்துள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 69 ஆவது ஃபிலிம்பேர் விழாவில் விருது வென்ற பிரபலங்களின் பட்டியலை விரிவாக பார்ப்போம்.

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்,  நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படத்திற்கு அதிக அளவில் விருதுகள் கிடைத்துள்ளன.

அதன்படி சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதை சித்தா வென்றுள்ளது .

சிறந்த நடிகர் விருது சித்தா பாட நாயகன் சித்தார்த்துக்கு கிடைக்கப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி பாடலுக்கான விருதை சித்தா படத்தின் கண்கள் ஏதோ பாடலை பாடிய கார்த்திகா வைத்தியநாதன் பெற்றுக் கொண்டுள்ளார் .

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது சித்தா பட நாயகி  நிமிஷா சஜயனுக்கு கிடைக்கப்பட்டுள்ளது 


சிறந்த துணை நடிகருக்கான விருதை சித்தா படத்தில் நடித்த அஞ்சலி நாயர் வென்றுள்ளார் .

சிறந்த இயக்குனருக்கான விருது சித்தா பட இயக்குனர் அருண்குமார் பெற்றுள்ளார். 

சிறந்த இசை ஆல்பத்திற்கான விருதும் சித்தா படத்திற்கு கிடைத்துள்ளது. அதை சந்தோஷ் நாராயணன் மற்றும் திபு நினன் தாமஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளது.

அதில் ஆதித்த கரிகாலனாக நடித்த சீயான் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சின்னஞ்சிறு கிளியே பாடலை பாடிய ஹரிசரனுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருதும், சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் விருது கலை இயக்குனர் தோட்டா தரணி வென்றார். 

மேலும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ரவிவர்மனுக்கு வழங்கப்பட்டதோடு, சிறந்த பாடலாசிரியர் விருது அகநக பாடலை எழுதிய இளங்கோ கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து மாமன்னன் படத்தில் வில்லனாக மிரட்டிய பகத் பாசிலுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், சிறந்த இயக்குனர் விருது விடுதலை படத்திற்காக வெற்றிமாறனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது டாடா பட நாயகி அபர்ணா தாசுக்கும் கிடைத்துள்ளது.

மேலும் தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது தசரா பட நாயகன் நானிக்கு வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சிறந்த நடிகைக்கான விருதை தசரா பட நாயகி கீர்த்தி சுரேஷ் வென்றுள்ளார்.

மலையாளத்தில் சிறந்த நடிகருக்கான விருது நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்காக மம்முட்டிக்கு வழங்கப்பட்டது. கன்னடத்தில் சிறந்த நடிகருக்கான விருதை ரக்‌ஷித் ஷெட்டி வென்றார்.

Advertisement

Advertisement