• Dec 29 2025

நீத்துவின் திமிரை லெஃப்ட் ஹேண்டில் அடக்கிய ஸ்ருதி! சத்யா விஷயத்தில் திடீர் ட்விஸ்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  சத்யாவிடம் பேசிய முத்து, இந்த வேலை வேண்டாம்.  உன்னுடைய படிப்புக்கும் திறமைக்கும் என்ற நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களை கஷ்டப்படுத்தி  அதில் சம்பளம் பெற வேண்டாம் என்று அட்வைஸ் பண்ணுகின்றார். 

இதைத் தொடர்ந்து சத்யா தனது ஓனரிடம் சென்று,  தனக்கு இந்த வேலை வேண்டாம். அடுத்தவரை கஷ்டப்படுத்த எனக்கு பிடிக்கவில்லை. நான் இந்த வேலையை விட்டுப் போவதாக சொல்ல,  ஓனர் கதிரையில் இருந்த  அவருடைய மகள்  கைதட்டிக்கொண்டு திரும்புகின்றார்.

அதன்பின்பு அங்கு வந்த தனது தந்தையிடம்,  அவருக்கு மனசாட்சி இருக்கு போல அவர் வேலையை விட்டு போவதாக சொல்ல,  சத்யாவை வேலையை விட்டு போக வேண்டாம் என்று சொல்லியதோடு அவருக்காக ரூல்ஸ் மாற்றுவதாகவும் அவர் சொல்லுகின்றார்.

அதன்பின்பு அவர்  தனது அம்மாவான சிந்தாமணியை பார்க்க செல்கிறார்.  மேலும் தான் லண்டனில் இருக்கும் போது வந்து பார்க்கவில்லை என்று கோபப்படுகின்றார் .  அந்த நேரத்தில் சிந்தாமணி தன்னுடன் ஒருவாரம் இருக்குமாறு கேட்கின்றார் .


இன்னொரு பக்கம் ஸ்ருதி  நீத்துவின் ரெஸ்டாரண்டுக்கு வந்து  சாப்பாட்டை ஆர்டர் பண்ணுகின்றார்.   அதற்கு ஏன் உங்களுடைய ரெஸ்டாரண்டில் சமைக்க வில்லையா?  என்று நீத்து கேட்க,  இன்றைக்கு செம கிரவுடா இருக்குது...  அதனால சமைக்க லேட் ஆகும் என்று  ஆர்டர் பண்ண வந்தேன். 

நீங்க  என்ட ரெஸ்டாரன்ட் வேலைக்கு  வந்தவங்களை பணம் கொடுத்து  வாங்கிட்டீங்க.. ஆனா அதுவும் நல்லது தான்.. இப்போ எனது ரெஸ்டாரன்ட் ரொம்ப கலர்ஃபுல்லா காலேஜ்  பசங்க கூட  கலகலன்னு இருக்குது.. எப்பவும் எதிரி ஒருவர் இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க அதனை ரவி கேட்டு விடுகிறார். 

ஸ்ருதி போன பின்பு இது எல்லாம் உண்மையா என்று கேட்க,  ஆம் என்று நீத்து சொல்கிறார். இது எனக்கு பிடிக்கவில்லை என்று ரவி சொல்ல,  நீங்க சமையல் வேலை மட்டும் பாருங்க என்று நீத்து சொல்லி அனுப்புகிறார். 

இறுதியில்  அண்ணாமலை மீனாவிடம் அவருடைய அம்மா பற்றி விசாரித்து விட்டு அருண் வீட்டில் இருந்து அவர் வந்தவுடன் சொல்லவும் நான்  வந்து பார்க்கின்றேன் என்று சொல்லுகின்றார். 

மேலும் முத்துவிடம் சீதா பிரச்சினையை முடித்து வைக்குமாறு சொல்லுகின்றார் .  இதனால்  முத்து சீதாவையும் மீனாவையும்  சேர்த்து வைப்பது பற்றி யோசிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement

Advertisement