பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, குமாரோட அம்மா அரசியை பார்த்து எப்புடி இருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு அரசி நல்லா இருக்கிறேன் என்று சொன்னதைக் கேட்ட குமாரோட அம்மா எனக்காக என்ர மகனோட வாழ்க்கையையே காப்பாத்தி இருக்கிற நீ எப்பவுமே நல்லா இருப்ப என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் முத்துவேல் கிட்ட நிக்கிறதைப் பார்த்த சக்திவேல் என்ன அம்மாவோட பிறந்த நாளை வைத்து சேர்ந்திடலாம் என்று நினைச்சிட்டீங்களா என்று கேட்கிறார்.

பின் குமார் கதிர் கொடுத்த போட்டோவை எப்புடியாவது உடைச்சிடனும் என்று பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாட்டி அந்த போட்டோவை எடுத்துக் கொண்டு போறார். அதனை அடுத்து சக்திவேல் தன்ர சொந்தக்காரங்க எல்லாரையும் கறி சாப்பாடு சாப்பிட வரச் சொல்லுறார். அதைப் பார்த்த கதிரோட அக்கா நாமளும் கறி சாப்பாடு போட்டிருக்கலாம் என்கிறார்.
பின் சமையல் காரங்க கறி சாப்பாடு கொண்டு வராமல் புளிசாதம் கொண்டு வந்திருப்பதைப் பார்த்த சக்திவேல் கோபப்படுறார். அதனை அடுத்து, தான் சக்திவேலுக்கு உண்மை தெரிய வருது அது பாண்டியன் ஓடர் பண்ண சாப்பாடு... குமார் ஓடர் பண்ண சாப்பாடு இன்னும் வரல என்று.... பின் முத்துவேல் குமாரைப் பார்த்து நீ ஓடர் பண்ண சாப்பாடு எங்க என்று கேட்கிறார்.

அதனைத் தொடர்ந்து குமார் சமையல்காரர் வரமாட்டேன் வேற ஓராளோட கதைக்க சொன்னவர் நான் மறந்து போட்டேன் என்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் முத்துவேல் குமாரை அசிங்கப்படுத்திட்ட என்று சொல்லி அடிக்கிறார். இதனை அடுத்து கதிர் சக்திவேலோட சொந்தக்காரங்க எல்லாரையும் தாங்கள் ஓடர் பண்ண சாப்பாட்டை சாப்பிடச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!