தென்னிந்திய சினிமாவில் தனது தனித்துவமான குரல், நடிப்பு மற்றும் ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். பல்வேறு முகங்களில் திகழும் இவர், சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த கூலி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து ‘ஆகாசம் லோ ஒக்கா தாரா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, தனது வாழ்க்கைச் சம்பவங்கள், படப்பிடிப்பு தருணங்கள் மற்றும் மாடலிங் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் ஊதா நிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களில் அவர் எளிமையாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறார்.
இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஸ்ருதியின் அழகை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!