சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணியின் பிரச்சனையை தீர்த்து வைத்ததற்காக மனோஜ், முத்துவுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
அதன் பின்னர், சிந்தாமணியின் நண்பர்கள் பூ வியாபார சங்கத்திற்கு தேர்தல் வருவதாகவும், இந்த முறை அவர் போட்டியிட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆரம்பத்தில் சிந்தாமணி மறுப்புத் தெரிவிக்கிறார். ஆனால் அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால், இறுதியில் தேர்தலில் போட்டியிட சம்மதிக்கிறார்.
மற்றொரு பக்கம், மீனாவின் நண்பர்களும், தெரிந்த பூ வியாபாரிகளும் இணைந்து மீனாவையும் தேர்தலில் நிற்க வைக்க முயற்சிக்கின்றனர். முதலில் மீனா மறுத்தாலும், பின்னர் அவர் சம்மதம் தெரிவிக்கிறார்.

இந்த தகவல் சிந்தாமணியின் காதுக்கு சென்றதும், “நான் போட்டியிடுவது மீனாவுக்கு தெரியாமல் இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார். ஆனால் மீனா போட்டியிடுவதாகத் தெரியவர, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.
இதற்காக விஜயாவை சந்தித்து, “மீனா தலைவி ஆகிவிட்டால், நீங்கள் அவளின் கீழ் இருக்க வேண்டிய நிலை வரும்” என்று தூண்டுகிறார். இதனால் விஜயா கடும் கோபமடைகிறார்.
இறுதியில், மீனா தனது வீட்டிற்கு சென்று, தேர்தலில் போட்டியிடும் செய்தியை அனைவருக்கும் தெரிவித்து இனிப்புகள் வழங்குகிறார். அந்த சமயத்தில் சிந்தாமணியின் மகளும் அங்கே இருக்கிறார். ஆரம்பத்தில் இது சிரமமான விஷயம் என்று கூறினாலும், பின்னர் மீனாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.
Listen News!