• Apr 07 2026

விஜயாவுக்கு சூடு போடும் பிளானில் ஸ்ருதி .. மீனா கேட்ட கேள்வி? ஒட்டுக் கேட்ட விஜயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ஸ்ருதியும் மீனாவும் கிச்சனில் பேசிக் கொண்டு இருக்க, ஸ்ருதி நான் எல்லாம் உங்களை போல பொறுமையா இருக்க மாட்டேன். யாராச்சும் என்னை கோவப்படுத்தினா சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லுகிறார்.


அதற்கு மீனா, இப்போ அத்தை உங்க மேல கோவப்பட்டா என்ன செய்விங்க என்று கேட்க, அவங்க மட்டும் என் கைல மாட்டினாங்க உண்டு இல்லை என்று பண்ணிடுவேன் என்று சொல்ல, இதை வெளியில் இருந்து விஜயா கேட்கிறார்.

மேலும், கரண்டியை எடுத்து சூடு காட்டி எக்ஸ் மாதிரி பெருசா சூடு போடுவேன் என சொல்லுகிறார். இதை கேட்டு விஜயா ஷாக் ஆகி நிற்கிறார். இது தான் நாளைய நாளுக்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement