• Jan 19 2025

ராதிகாவை அவாய்ட் பண்ணி பாக்கியாவை தேடியோடிய கோபி! பழனிக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா பழனிச்சாமியின் ரெஸ்டாரண்டை ஓபன் பண்ணுவதற்கு டெக்கரேஷன் பண்ணி வைக்கின்றார். அதன் பின்பு பழனியின் அம்மா வந்து கடையை ஓபன் பண்ணி வைத்து பாக்கியாவையும் விளக்கேற்ற வைக்கிறார்.

அதன் பின்பு சர்ப்ரைஸ் என சொல்லி பழனிச்சாமியின்  குடும்பத்திற்கு ஸ்வீட் செய்து கொடுக்கிறார் பாக்கியா. இந்த ரெண்டு கடையும் ஒரு கடை தான் இனி பிரிச்சு பிரிச்சு பார்க்க வேண்டாம் என்று பழனி பாக்யாவுக்கு கைகொடுக்க, பழனியின்  அம்மாவும் அக்காவும் அதை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.

மறுபக்கம் கோபி டைமுக்கு டைம் ரெஸ்டாரன்ட் வேலையும் பார்த்து ஈஸ்வரிக்கு சாப்பாடு மாத்திரையும் கொடுத்து வருகின்றார். ஆனாலும் ரெஸ்டாரண்டில் சின்ன மனக்கசப்பு ஏற்படுகின்றது. அதன்பின் கோபி போனில் பேசிக் கொண்டிருக்க ராதிகா போய் பேசவும் அவரை அவாய்ட் பண்ணுவது போல பார்க்காமல் நிற்கின்றார் இதனால் ராதிகா திரும்பி சென்று விடுகிறார்.


அடுத்த நாள் காலையில் கோபியும் ஈஸ்வரியும் வாக்கிங் சென்று கொண்டு இருக்க, கோபி வீட்டையும் ரெஸ்டாரண்டையும் மேனேஜ் பண்ண முடியல என்று புலம்புகிறார். இதனால் ஈஸ்வரி உன்ன விட பாக்கியா எத்தனையோ வருஷம் பிஸ்னஸ் பண்றா, ஆனா ஒரு நாள் கூட முகம் சுளிச்சது இல்ல புலம்பினதும் இல்லை என்று பாக்கியாவை பற்றி பெருமையாக பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து பாக்கியாவும் ராமமூர்த்தியும் வாக்கிங் வர, ராம மூர்த்தி, ஈஸ்வரியும் தனியாக பேச செல்கின்றார்கள். அதன்பின் கோபி பாக்கியாவிடம் சென்று எப்படி இரண்டையும் மேனேஜ் பண்ணுற என்று கேட்க, நீங்கதான் ரொம்ப புத்திசாலி ஆச்சே என்று பதிலடி கொடுத்து செல்கிறார் பாக்யா.

இறுதியாக ராம மூர்த்தியிடம் அத்தை எப்படி இருக்காங்க என்று கேட்க, அவ உன்ட சாப்பாட மிஸ் பண்ணுறா ஆனா இன்னும் பட்டுட்டு தான் வரணும் என சொல்லுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement