தளபதி விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆகி சினிமா உலகையே உலுக்கிய நிலையில், கோவையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோவை கருமத்தப்பட்டி பகுதியில் இயங்கும் ராசி பிரைம் மூவி என்ற உள்ளூர் கேபிள் சேனலில், லீக் ஆன ஜனநாயகன் படத்தை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பினார் அந்தப் பகுதியின் கேபிள் ஆபரேட்டர். இந்தத் துணிச்சலான செயல் தமிழக வெற்றி கழக ஆதரவாளர்களிடையே கடும் கோபத்தை கிளப்பியது.

உடனடியாக கருமத்தப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் புகாரை பதிவு செய்ய தயக்கம் காட்டிய போலீசார், தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் வழக்கு பதிவு செய்து கேபிள் ஆபரேட்டரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே படம் தரமான வீடியோவாக இணையத்தில் பரவியதால் 500க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இப்படியிருக்க, கேபிள் டிவியிலேயே படத்தை ஒளிபரப்பிய சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!