• Apr 14 2026

விஜய் படத்தை விட நட்டி படம் அதிக சம்பளம் கொடுத்ததா? இந்திரஜாவின் சம்பள ரகசியம் வெளியானது!

Aathira / 10 hours ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர்தான் இந்திரஜா. இவர் ரோபோ ஷங்கரின் மகள் ஆவார். அந்தப் படத்தில் இவர் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது அவரைப் பற்றி எங்கும் பிரபலமாக்கியது.

இதைத்தொடர்ந்து இந்திரஜா படங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு திடீரென திருமணம் நடைபெற்றது. அதற்குப் பின்பு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகவும் மாறினார். பின்பு நீண்ட நாட்களாக தன்னுடைய குடும்பத்தின் மீதே கவனம் செலுத்தினார்.

எனினும் சமீபத்தில் நட்டி நடராஜ் நடிப்பில் வெளியான TN 2026 படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்துள்ளார். இந்தப் படத்தை உமாபதி ராமையா இயக்கியுள்ளார். மேலும் இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்தப் படம் விஜயை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக விஜயின் அரசியல் பிரவேசத்தை மையமாகக்கொண்டே இதன் கதைக்களமும் நட்டி நடராஜனின் அசைவுகளும் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டன.

ஆனாலும் நட்டி நடராஜன் சமீபத்தில், "விஜய் ஒரு சிங்கம். அவரை நாங்கள் கேலி செய்கிறோம் என்பது தவறு. அவருடன் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என்னுடைய நண்பர். அவரை நாங்கள் கலாய்க்க முடியுமா?" என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், பிகில் படத்திலும் TN 2026 படத்திலும் நடித்த இந்திரஜா, தான் பெற்ற சம்பள விவரங்களை தனியார் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அதன்படி, பிகில் படத்திற்கு அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்துள்ளனராம். அதற்காக அவர் ஆறு மாதம் உழைத்ததாகவும், ஆனாலும் தனக்கு சம்பளம் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை, தனக்கு அனுபவம் வேண்டும் என்றே நடித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் TN 2026 படத்தில் நடிப்பதற்காக தனக்கு ஒரு நாளில் ரூ.40,000 சம்பளம் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement