• Jan 18 2025

மணப்பெண்ணை கூட யாரும் பாக்கலை.. அர்ஜுன் மகள் திருமணத்தில் மகளுடன் ஷாலினி அஜித்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த திருமணத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா கலந்து கொண்ட நிலையில் மணமகளை விட இவர்கள் இருவரையும் பார்த்து ரசித்தவர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் அர்ஜுனனுக்கு சொந்தமான கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது என்பதும், இந்து சமய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிகவும் ஒரு சில நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொள்ளும் அஜித்தின் மனைவி ஷாலினி, அர்ஜுன் மகள் திருமணத்திற்கு விடுத்த அழைப்பின் காரணமாக தனது மகளுடன் சென்றார். ’மங்காத்தா’ படத்தில் நடித்த பின்னர் அஜித் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகியுள்ள நிலையில் அஜித் வந்தால் திருமண வீட்டில் தேவையில்லாத பரபரப்பு ஏற்படும் என்பதற்காக தான் தனது மனைவி மற்றும் மகளை இந்த திருமணத்திற்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜுன் மகள் திருமணத்திற்கு ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா மிகவும் எளிமையான மேக்கப் உடன் வந்தாலும் அவர்களை தான் திருமண வீட்டார்கள் எல்லோரும் கண் சிமிட்டாமல் பார்த்ததாகவும் இருவரும் அக்கா தங்கச்சி போல் இருப்பதாகவும், கொள்ளை அழகுடன் இருந்ததை பார்த்து ரசித்ததாகவும் தெரிகிறது.

மேற்கண்ட புகை புகைப்படத்தில் உள்ள மேக்கப்பில் தான் இருவரும் சென்ற நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்தே பலர் ஆச்சரியப்பட்டு வரும் நிலையில் நேரில் பார்த்தவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.

Advertisement

Advertisement