• Oct 26 2025

சீரியல் நடிகை ரச்சிதாவின் தந்தை மரணம்! ஆறுதல் கூறிவரும் ரசிகர்கள்!

sarmiya / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தார். அதன்பிறகு, சினிமா துறையில் ஆர்வம் காட்டினார். அதனால் சில படங்களில் அவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்


இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அத்தோடு இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை,  உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.


இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஷாக்கிங் தகவலை ரசிகர்களுக்கு அறிவித்தார். அதாவது அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகர் தினேஷை பிரிந்து இருப்பதை உறுதி செய்தார். தினேஷ் நிறைய பேட்டிகளிலும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் தற்போது பிரிந்து இருக்கிறோம் என்று தான் கூறியிருந்தார்


இனி தனக்கு எல்லாமே தனது அம்மா-அப்பா மட்டும் தான், அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருப்பார். இந்த நிலையில் நடிகை ரச்சிதாவின் தந்தை ருஷிகுமார் இன்று உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரச்சிதா இந்த சோக செய்தியை கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CynZqFNPKNt/?igshid=MzRlODBiNWFlZA==

Advertisement

Advertisement