• Apr 26 2024

தனிமையில் தீபாவளி கொண்டாடிய சீரியல் நடிகை மைனாவின் கணவர்..வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் நடிகை ரச்சிதா, மீனாட்சியாக நடிக்க தொடங்கிய அந்த சீசனில் அவரது தோழியாக நடித்தவர் நந்தினி. அதில் அவரது பெயர் மைனா ஆகும்.   மேலும் சரவணன்-மீனாட்சி சீரியல் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.


அதுமட்டுமல்லாமல் மைனா என்ற அவரது கதாபாத்திரம் மக்களிடம் நன்கு ரீச் ஆக அதுவே அவரது அடைமொழி பெயராக மாறியது. அதுமட்டுமல்லாமல் நந்தினி இப்போது தொடர்ந்து சீரியல் நடிப்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார்.


இந்நிலையில் யோகேஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நந்தினிக்கு இப்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது நந்தினி பிக்பாஸ் சீசன் 6 சென்றுள்ளார்.


இதனால் நந்தினி கணவர் தனது மகனுடன் தனிமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement