• Apr 19 2024

GPமுத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்- புகழாரம் சூட்டிய பிரபல இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. 21 போட்டியாளர்கள் பங்குபற்றி வந்த இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 19 பேர் மட்டுமே உள்ளனர். சாந்தி மாஸ்டர் எலிமினேட் ஆகி வெளியேறினார்.

ஆனால் ஜி.பி முத்து பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அடம் பிடித்து பிக் பாஸ் மற்றும் கமல்ஹாசனிடம் விடைபெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார். இவர் வெளியேறியது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.


மேலும் பிக்பாஸை விட்டு முத்து வெளியேறிய பின்னர் அவர்  ரசிகர்கள் அவரது சமூக வலைத்தளத்தின் மூலம் தொடர்பு கொண்ட வருகின்றனர்.அத்தோடு ஜி.பி முத்து பாசம் மிகுந்த தந்தை என பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

வெற்றி பெறதகுதியான ஒரு போட்டியாளன்,அதன் வருமானம்வெகுமானம்யாவற்றையும்பணிவோடு வேண்டாமெனதுறந்து விட்டுதன்மகனுக்காக புகழ்வாய்ந்தசபையில்உலகறிந்த நடிகர் கேட்டும்கேளாமல் #bigbosstamil6 லிருந்துவிடைபெற்ற தமிழ்மகன்#GPமுத்து தான் தீபாவளியின்வெற்றி நாயகன்  எனப் பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement