• Dec 07 2022

பிக்பாஸ் லொஸ்லியா நடிக்கும் 'அன்னபூரணி' படத்தின் பர்ஸ்ட்லுக்... போஸ்ட்டரே இப்படி மாஸ் காட்டுதே...!

Listen News!
Prema / 1 month ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 இல் கலந்து கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒருவரே லொஸ்லியா. இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து வருகின்றார். 


இவருடன் இணைந்து இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் பொன்னியின் செல்வன் பட நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் தத்தமது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.  


கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் கொண்டமைந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்திலே திரை ரசிகர்களிடமிருந்து பெருமளவு வரவேற்பையும் பெற்று வருகின்றது.

அதாவது குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் உடைய பயணமாக இப்படம் அமைந்திருக்கின்றது.

மேலும் பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ஒரு மாறுபட்ட திரில்லர் படமாக அமைந்திருக்கின்றது. பிரபல பாடலாசிரியரான யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் இவரே எழுதியுள்ளார். 

அதுமட்டுமல்லாது மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா பிரமாண்டமாக இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் அவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்.

இப்படத்தில் ஜெயபீம் படத்தின் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய லிஜோ மோல் ஜோஸ், மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் யாவும் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகிய நிலையில் படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.