• Jan 10 2025

சீனு ராமசாமி எப்போதும் அங்க தான் இருப்பார்..! விவாகரத்துக்கு முக்கிய காரணம் வெளியானது!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனரான சீனு ராமசாமி நேற்றைய தினம் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன் மூலம் 17 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சீனு ராமசாமி.  

இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமியின் விவாகரத்து தொடர்பில்  பிரபல பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறிய விடயங்கள் வைரல் ஆகி வருகின்றன.

அதன்படி அவர் கூறுகையில், சீனு ராமசாமி தொடர்பில் இதுவரையில் எந்த வித கிசுகிசு தகவலும் வெளியானது இல்லை. ஆனால் கடந்த ஆண்டு இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த போது சீனு ராமசாமி தனக்கு உடல் ரீதியான தொல்லை கொடுத்ததாக மனுஷா யாதேவ் என்ற நடிகை குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தார். 

d_i_a

எனினும், இந்த குற்றச்சாட்டை பொதுவாகவே அவர் கூறினாரே தவிர அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.


தற்போது சீனு ராமசாமி தனது மனைவியை விவாகரத்து செய்ய ஒரே ஒரு விஷயம் தான் முக்கிய காரணமாக இருக்கும். அது சினிமாக்காரர்களின் மனைவிகளுக்கு சினிமாவைப் பற்றி எந்த விடயமும் தெரியாதது தான். அவர்களுக்கு பாடி டிமாண்ட் இருக்கும், தொழில் ரீதியான வலிகளும் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் மனைவிகள் புரிந்து கொள்வதில்லை.

மேலும், சினிமா வட்டாரத்தில் உள்ள நடிகர்கள், இயக்குனர்கள் தங்களுடைய மனைவி மீது அன்பு செலுத்த நேரம் இல்லாமல் போகலாம். இதனை மனைவிகள் புரிந்து கொண்டால் மட்டுமே சினிமாக்காரர்கள் ஆக இருந்தாலும் இயக்குனராக இருந்தாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ஆனால் சீனு ராமசாமி எப்பொழுதுமே அலுவலகத்தில் தான் இருப்பாராம். இதுதான் முக்கியமாக விவாகரத்துக்கு காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement