• Jan 19 2025

அதை பார்த்திட்டு என் புருஷன் தலைல அடிச்சுக்கிட்டாரு,- உண்மையை சொல்லி சிரித்த நடிகை லைலா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகை லைலா. இவர் திருமணம் செய்து கொண்டதால் சினிாமாவை விட்டு விலகியிருந்தார். தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். கிட்டத்தட்ட தமிழில் அனைத்து முக்கியமான நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார்.

தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றார்.வெப் சீரிஸிலும் நடித்து வருகின்றார். குறிப்பாக வதந்தி என்ற வெப்சீரிஸில் வில்லியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரமாகவே லைலாவை செதுக்கியிருப்பார்கள். அவர் நடித்த ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களை கவரும் விதமாகவே அமைந்திருந்தன.


தில், தீனா, பிதாமகன், பார்த்தேன் ரசித்தேன் போன்ற வெற்றிப்படங்களிலேயே பெரும்பாலும் பயணித்திருக்கிறார். குறிப்பாக பிதாமகன் படத்தில் காமெடி காட்சியில் மற்ற நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.


இந்த நிலையில அண்மையில் அவர் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் படங்களை அவரது கணவர் பார்த்து எதுவும் சொன்னாரா? அல்லது ஏதாவது அறிவுரை கொடுப்பாரா? என கேட்கப்பட்டது. அதற்கு லைலா ‘ஆமாம். சொல்லியிருக்கிறார். பிதாமகன் படத்தை பார்த்து அவர் தலையில அடிச்சுக்கிட்டாரு’ என சொல்லி லைலா சிரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement