• Jan 19 2025

இதுக்கு பெயர் தான் ஆன்மிகமா சத்குரு? கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் வீடியோ!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு அவர்கள், வித்தியாசமான ஒரு ஜோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்ந்து வருகிறார்.

இவரது ஆழமான எதார்த்தமான அணுகுமுறைக்கும், தத்துவத்துக்கும் பல பிரபலங்கள் பக்தர்களாக காணப்படுகிறார்கள்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பெரும்பாலும் சத்குரு எனவே அழைக்கப்படுகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் உலக அளவில் யோகா தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இவர் ஒரு ஆசிரியராக, ஊக்கமளிக்கும் பேச்சாளராக, ஆன்மீக குருவாகவும் காணப்படுகிறார்.


ஆன்மீக துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக 2017 ஆம் ஆண்டு இந்திய அரசின் மரியாதைக்குரிய பத்மவிபூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு இந்தியா டுடேவின் 50 சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இவரது பெயரும் இருந்தது.


ஒவ்வொரு மகா சிவராத்திரி விழாவிலும் இவரது போதனைகளை, நடனங்களை கண்டுகளிப்பதற்காக பல்வேறு சினிமா  பிரபலங்களும் பக்தியுடனும் கலந்து கொள்வார்கள். இம்முறை கூட முக்கியமாக பூஜா ஹெக்டே, சந்தானம், தமன்னா ஆகியோர் பக்தியுடன் பங்கு பற்றி இருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது சத்குரு, பெண் ஒருவருடன் நெருக்கமாக நடந்துவரும் வீடியோ ஒன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியாகி உள்ளது. 

குறித்த வீடியோ தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் குறித்த வீடியோவில் இருக்கும் பெண் அவருடைய மகள் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது 


Advertisement

Advertisement